ETV Bharat / state

மீண்டும் குடைக்கு வேலை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 3:00 PM IST

Meteorological Department announced the weather situation in TN due to the low pressure atmospheric in the Arabian Sea
வானிலை அறிவிப்பு

TN Weather Report: அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், வட தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் (ஜன.18) நாளையும் (ஜன.19) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம், "வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 20ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை: இன்று (ஜன.18) நாளை (ஜன.19) தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு.. வெண்மை போர்வை போர்த்தியதுபோல் தோற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.