ETV Bharat / state

மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : May 4, 2022, 6:14 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், 'தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 4) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இடி, மின்னல் சமயத்தில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே 5) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (மே 6)

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 7 வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 8 வானிலை நிலவரம்

மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை) மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பதிவு (செ.மீ)

சத்தியமங்கலம் (ஈரோடு) 5, ஏலகிரி ARG (திருப்பத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), சேலம் (சேலம்) 4, தளி (கிருஷ்ணகிரி), பென்னாகரம் (தருமபுரி), டேனிஷ்பேட்டை (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3, தேவாலா (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 2, சங்கரி துர்க் (சேலம்), செங்கம் (திருவண்ணாமலை), பொன்னை அணை (வேலூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று காலை (04.05.2022) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6ஆம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக,

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே7ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 8ஆம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோரத்தாண்டவமாடும் கோடை வெயில் - தெலங்கானாவில் ஒரேநாளில் 6 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.