ETV Bharat / state

பெண் மருத்துவருக்கு தொல்லை.. மெடிக்கல் ரெப் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jan 2, 2023, 2:37 PM IST

பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மெடிக்கல் ரெப் கைது
பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மெடிக்கல் ரெப் கைது

சென்னையில் பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மருந்து விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 38வயதான பெண் மருத்துவர் ஒருவர், நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகளான தான், மருத்துவ கல்வி பயின்று அதே பகுதியில் அழகு மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாசமாகப் பேசி தொந்தரவு கொடுத்ததால் பிளாக் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் அந்த நபர் போன் செய்து தொந்தரவு கொடுத்ததால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறி செல்போனை துண்டித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த நபர் போன் செய்து ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்து வந்ததால், அந்த அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இப்புகாரின் பேரில் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்புதல், ஐடி பிரிவு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெண் மருத்துவருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பிய நபர் பம்மலை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பது தெரியவந்தது. பின்னர் பன்னீர் செல்வத்தைக் கைது செய்த காவல்துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட பன்னீர் செல்வம் திருமணமாகிப் பம்மலில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது.

பல வருடங்களாக மருந்தாளுனராக பணியாற்றி வந்த பன்னீர் செல்வம், 5 வருடமாகப் பெண் மருத்துவரின் கிளினிக்கிற்கு மருந்து சப்ளை செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது பெண் மருத்துவரின் கிளினிக்கிற்கு பன்னீர் செல்வம் செல்வதால், பெண் மருத்துவர் மீது காதல் ஏற்பட்டதும், பின்பு பெண் மருத்துவரைச் சந்திப்பதற்காகவே மாதத்திற்கு இருமுறை கிளினிக்கிற்கு சென்று மருந்து இருப்பு குறித்துக் கேட்டறிந்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மருந்து விநியோகம் தொடர்பாகச் செல்லும் போது, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் செல்போன் எண் கிடைத்ததாகவும், அந்த எண்ணிற்குப் புகைப்படத்தை அனுப்பி பெண் மருத்துவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் விசாரணையில் பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தங்கை கணவருடன் தகாத உறவு.. ராணிப்பேட்டை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.