ETV Bharat / state

மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jan 22, 2022, 1:23 PM IST

மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என அழைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது

சென்னை : கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கினார். 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது.

விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ், கருணாநிதி சிலை வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் வீ.எஸ்.ராஜம், உல்ரிக் நிக்லாஸ் தவிர மற்றவர்களுக்கு நேரடியாக விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சர் பெருமிதம்

இதையடுத்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல, தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகின. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி . உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியியல் அறிஞர்கள் தமிழை தொன்மையான மொழி என கூறுகின்றனர்.

மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது

பண்பாட்டின் அடையாளமாக தமிழ் மொழி இருக்கிறது. தமிழ் பேசும்போது இனிமையாக உள்ளது. நிலம், மண், பண்பாடு, மக்களுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கிறது. நம் தமிழ் மொழி தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஆட்சி திமுக ஆட்சியில் தான் வள்ளுவருக்கு சென்னையில் கோட்டமும், கன்னியாகுமரியில் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

செம்மொழி சாலை

பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு தனி கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். தமிழ் மொழி ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பணியாற்றி வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ”என கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திருச்சியில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.