ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களை ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற இளைஞர் கைது

author img

By

Published : Aug 27, 2022, 3:53 PM IST

60 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களை 2000 ரூபாய்க்கு விற்ற நூதன திருடன் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் பல அடிக்கடி திருடு போவதாக மருத்துவமனை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து பைக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், கண்ணகி சிலை அருகே பண்ரூட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி வந்த கணேஷ் சென்னை மெரினா கடற்கரையிலேயே தங்கி கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தார். நாளடைவில் கஞ்சா போதைக்கு அடிமையானார். அதற்காக பிக் பாக்கெட், செல்போன் பறிப்பு, திருட்டு செயல்களில் ஈடுபட தொடங்கினார்.

இதனிடையே ரயில்வேயில் இரும்பு கம்பிகளை திருடிய வழக்கில் கைதானார். ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார். இதையடுத்து வெளியே வந்த அவர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்தார். அந்த வகையிலேயே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்று இருசக்கர வாகனங்களை திருடினார்.

அதன்பின் நம்பர் பிளேட்டை உடைத்தெறிந்துவிட்டு, 60 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் அவரிடமிருந்து 13 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. தலை மறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் கிருஷ்ணா, அமீன் ஆகியோர் தேடப்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜாமினில் வெளி வந்து 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.