ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சென்னையில் ஆலோசனை?

author img

By

Published : Oct 31, 2022, 10:53 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தேர்தல் வியூகம் குறித்து நாளை மறுதினம் சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வீயூகம் குறித்து ஸ்டாலினுடன்  மம்தா பானர்ஜி சென்னையில் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் வீயூகம் குறித்து ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சென்னையில் ஆலோசனை

சென்னை: வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை எதிர்த்து, போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற வியூகம் வகுத்து வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அதன், ஒரு பகுதியாக நவம்பர் இரண்டாம் தேதி மாலை சென்னையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துப்பேச உள்ளனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும்; வரக்கூடிய நாடாளுமன்றத்தேர்தல் வியூகம் குறித்து மிக முக்கியமாக பேச உள்ளதாகத்தகவல் வெளியாகி உள்ளது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழ்நாட்டிற்கு நவம்பர் 2ஆம் தேதி மாலை வருகிறார். பின், மேற்கு வங்க பொறுப்பு ஆளுநரும் தமிழ்நாட்டைச்சார்ந்த இல.கணேசனின் சகோதரர் இல்ல விழாவில் கலந்துகொள்கிறார், மம்தா பானர்ஜி.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் மம்தாவும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேவர் குருபூஜை: செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்தாரா? ஈபிஎஸ் ஏன் பசும்பொன்னிற்கு செல்லவில்லை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.