ETV Bharat / state

கொடி பறக்குற காலம்... உலக சாதனைப் படைத்த மாமன்னன்!

author img

By

Published : Aug 2, 2023, 4:12 PM IST

Updated : Aug 2, 2023, 4:59 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமூக நீதி பேசும் படமாக ஜூன் மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றபடம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி, அதிகம் பார்க்கப்பட்ட பட்டியலில், இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றும், உலக அளவில் ஒன்பதாம் இடத்தைப் பெற்றும் சாதனைப் படைத்துள்ளது.

உலக சாதனை படத்த மாமன்னன் திரைப்படம்
உலக சாதனை படத்த மாமன்னன் திரைப்படம்

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் "மாமன்னன்". கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது. ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரின் மத்தியிலும் இப்படம் பாராட்டுக்களைக் குவித்தது.

தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK-வின் படத்தொகுப்பு (Editing), இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மனதை உருக்கும் இசை என இப்படம் ஒரு மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. மேலும் காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட நடிகர் வடிவேலு முதன்முறையாக ஒரு மாறுபட்ட வேடத்தில், 'மாமன்னனாக' இப்படத்தில் வாழ்ந்திருந்தார். நடிகர் ஃபகத் ஃபாசில், 'ரத்னவேலு' என்ற கதாப்பாத்திரம் மூலம் வாழ்ந்து காட்ட, உதயநிதி ஸ்டாலின் மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் கதாபாத்திரம் மூலம் அழகாகப் பிரதிபலித்தார்.

இப்படம் ‌திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட நிலையில், ஜூலை 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியானது. வெளியான வேகத்தில், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்தியா முழுக்க ரசிகர்கள், இப்படத்திற்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Fahadh Faasil: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஃபேவரைட் வில்லனாகும் ஃபகத் ஃபாசில்!

இந்தியா மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட உலகத் திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் "மாமன்னன்" என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர். இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மாமன்னன் படத்தின் சாதனை குறித்து அப்படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

  • Not just India. #Maamannan is under the top 10 films that has been watched globally on Netflix. No.1 in 2 other countries and among the top 10 in 6 Countries!! Also 1.2M people have watched the film World Wide!

    Cheers to breaking those boundaries! #1onNetflixpic.twitter.com/PeZMBSNY70

    — Mari Selvaraj (@mari_selvaraj) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அண்மையில், இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தை, நெட்டிசன்கள் மற்ற திரைப்படப் பாடல்கள் வைத்து எடிட் செய்து, ரத்னவேலு கதாபாத்திரத்தை கதாநாயகனாக பிரதிபலிக்க செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: நடிகர் கவின் கல்யாணம் முதல் சுப்ரமணியபுரம் ரீரிலீஸ் வரை கோலிவுட் அப்டேட்கள்!

Last Updated : Aug 2, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.