உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

author img

By

Published : Oct 11, 2021, 7:43 PM IST

Updated : Oct 12, 2021, 6:19 AM IST

நாளை வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவினை காலை 8 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https : //tnsec.tn.nic.in-இல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 9 மாவட்ட குழு தலைவர்கள், 74 ஒன்றிய தலைவர்கள், 2901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

முதல் கட்ட தேர்தலில் 77. 43 விழுக்காடும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 70.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?
உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?

இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை

அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அடையாள அட்டைகள் (பதவி வாரியாக) வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவினை இன்று காலை 8.00 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https : //tnsec.tn.nic.in- ல் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வாக்கு எண்ணிக்கை - ஆலோசனை

இந்நிலையில் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ . பழனிகுமார், தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி ஆய்வுக்கூட்டம் இன்று ( 11.10.2021 ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு ஜி.வெங்கடராமன், காவல் உதவி தலைவர் ( தலைமையிடம் ) முனைவர் எம் . துரை, கூடுதல் இயக்குநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஜி.சம்பத், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்), க . அருண்மணி, உதவி ஆணையர் ( தேர்தல் ) திரு அகஸ்ரீ சம்பத்குமார் மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் இன்று நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறுவது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனைகளை வழங்கினார்.

உள்ளாட்சி தேர்தல்  வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
* வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அலுவலர்கள் காலை 6.30 மணிக்கு ஆஜராவதை உறுதி செய்திடவும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் உரிய அடையாள அட்டையின்றி எவரும் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அடையாள அட்டை

* வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

* வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியில் 200 மீட்டர் இடைவெளிக்குள் தேவையின்றி கூட்டம் கூடுவதை தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்  வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

* வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிவித்திடவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

* மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கோவிட் -19 வழிகாட்டு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

* மேலும் மேற்படி கூட்டத்தில் கீழ்க்கண்ட பொருட்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கப்பட்டன*

* வாக்குச்சீட்டுகள் எண்ணிக்கை முடிந்தவுடன் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் குறித்த ஆலோசனை* வாக்கு எண்ணிக்கைக்கு போதுமான மேசைகள் மற்றும் அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்தல்.

* வாக்கு எண்ணிக்கை மையத்தில் கோவிட் -19 சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துதல்.

உள்ளாட்சி தேர்தல்  வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

* வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையில்லாத கூட்டம் சேர்தலை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்தல்.

* வாக்கு எண்ணிக்கை மையங்களில் உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்தல் .

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழுமையான மின்சார வசதி மற்றும் மழையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்தல், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவித்தல்.

* தேர்தல் முடிவுகள் குறித்து உடனடியாக தக்க பதிவுகள் மேற்கொண்டு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல்.

* ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல் கூட்டம் 20.10.2021 அன்று நடத்தபெறுவது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.

Conclusion: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Last Updated :Oct 12, 2021, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.