ETV Bharat / state

ஒரு காட்டுல மான், காக்கா, கழுகு இருந்துச்சாம்… லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 10:58 PM IST

Updated : Nov 1, 2023, 11:03 PM IST

Vijay speech in Leo success meet: லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டிக் கதையை கேட்டு ரசிகர்கள் அரங்கம் அதிற ஆரவாரம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய், “நான் ரெடி தான் வரவா பாடலை பாடி பேச்சை தொடங்கினார். இவ்வளவு நாளா நான் தான் உங்களை என்‌ நெஞ்சில் குடி வைத்துள்ளேன் என்று நினைத்தேன். நீங்கள் தான் என்னை உங்கள் நெஞ்சில் குடிவைத்துள்ளீர்கள். எனது மனதில் இருந்து சொல்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு என்ன செய்யப் போகிறேன், உங்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.

நான்‌ சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையா இருப்பேன். சமூக வலைதளங்களில் உங்கள் கோபம் அதிகமாக இருக்கிறது. வேண்டாம் நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நம்ம வேலை அது இல்லை, நமக்கு நிறைய வேலை இருக்கிறது. இத்தனை கோபம் உடம்புக்கு நல்லதல்ல. அகிம்சை வன்முறையை விட உறுதியான வலிமையான ஆயுதம்.

விஜய் கூறிய குட்டிக் கதை ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனார்கள். மான், மயில், காக்கா, கழுகு இருந்ததாம். (ரசிகர்கள் ஆரவாரம்) விஜய் சிரித்தபடி இருந்தார். வில் அம்பு எடுத்துட்டு‌ போனார்கள் முயலை கொன்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை கொல்ல முடியவில்லை. யானையை தவறவிட்டவர் தான் வெற்றியாளர் நம்மால் சுலபமாக வெல்ல முடிவதை வெல்வது வெற்றியல்ல.

நம்மால் வெல்ல முடியாததை வெல்வது தான் வெற்றி. லட்சியத்தை பெரிதாக யோசிக்க வேண்டும். பாரதியார்‌ சொன்னது போல் பெரிதினும் பெரிது கேள். பெரியதாக எண்ணம் வையுங்கள். வீட்டில் குட்டி பையன் அப்பாவின் சட்டையையும், கடிகாரத்தையும் எடுத்து போட்டுக் கொள்வான். அப்பாவின் நாற்காலி அவருக்கு தகுதியாக இருக்காது, ஆனால் முடியாது அப்பா போல ஆக வேண்டும் என்பது பகல் கனவு.

லியோ பாட்டு வரிகள் பிரச்சனை ஆனது. விரல் இடுக்கில் தீப்பந்தம் என்பது சிகரெட் இல்லை பேனாவாக நினைத்துக் கொள்ளலாம். பத்தாது பாட்டில், அண்டால கொண்டா என்பது கூழாக கூட இருக்கலாம். சினிமாவை சினிமாவாக பாருங்கள். சினிமா கற்பனை செயற்கையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு கெட்டவனை வேறுபடுத்தி காட்ட அப்படி தான்‌ சொல்ல வேண்டும். நீங்கள் அதை பின்தொடர மாட்டீர்கள் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும்.

பள்ளி, கல்லூரி செல்லும் வழியில் நிறைய டாஸ்மாக் இருக்கு. அவங்க சரக்கு அடிச்சுட்டா போறாங்க. கண்டுக்காம போறாங்கள்ல.. நான் சொல்லாமலேயே உங்களில் பல பேர் உங்கள் சக்திக்கு மீறி நல்ல விஷயங்களை செய்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, மும்பை, கனடாவிலும் நல்ல விஷயங்களை செய்கிறீர்கள்.

நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். யார் அள்ளிக் கொடுத்தாலும் அது எம்ஜிஆர் என்று தான் அப்போது எல்லோரும் நினைப்பார்கள். அதுபோல எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க தான் செய்தார்கள் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை” என பேசினார்.

இதையும் படிங்க: "விஜய் விஜயாகவே இருப்பதற்கு யார் காரணம்?" - லியோ வெற்றி விழாவில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

Last Updated : Nov 1, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.