ETV Bharat / entertainment

"விஜய் விஜயாகவே இருப்பதற்கு யார் காரணம்?" - லியோ வெற்றி விழாவில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 10:24 PM IST

leo success meet: லியோ வெற்றி விழாவில் விஜய்யாக இருப்பது கஷ்டமா, இல்லை இஷ்டமா என நடிகர் அர்ஜூன் கேட்டதற்கு, "வெளியில் இருந்து பார்க்கும் போது கஷ்டமாக இருக்கலாம். ரொம்ப ஈஸிதான் அதற்கு முழு காரணம் நீங்கள் எல்லாம் (ரசிகர்கள்) தான் என நடிகர் விஜய் பதில் கூறியுள்ளார்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

சென்னை: லியோ வெற்றி விழாவில் மேடைக்கு வரும் போதே க்குசக்கு வத்திக்குச்சி பாட்டுக்கு ஆடிக் கொண்டே வந்த நடிகர் மன்சூர் அலிகான் பேசியது, "என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு நான்‌ சொல்லும் ஃபிளாஷ்பேக் என்னவென்று தெரியுமா என பாடிக்கொண்டே பேசினார். ஏன் ஃபிளாஷ்பேக் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு போன் செய்து என்னை மிரட்டுகின்றனர்.

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயரிடப்பட்ட இந்த நன்னாளில் உலகமே போற்றும் தமிழனின் வெற்றி கொண்டாட்டம் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் கோபக்காரர் ஆனால் தீர்க்கதரிசி. என்னிடம் என் பையனை வைத்து படம் எடுக்கிறேன், நீங்கள் வில்லனாக நடிக்க வேண்டும் என்றார். ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

சிவாஜி சக்ஸஸ் சக்ஸஸ் என்று சொன்ன அதே இடத்தில் நாளைய தீர்ப்பு படம் தொடங்கியது. தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். நானும் விஜய்யும் படத்தில் கதைக்காக தண்ணீ, தம் அடிப்போம். தமிழ்நாடு போதையால் சீரழிந்து கிடக்கிறது. விஜய் உங்களை நம்பித்தான் இந்த நாடு இருக்கிறது. த்ரிஷா கூட ஒரு காட்சி கூட இல்லை. துரத்தி பிடிக்கலாம் என்று நினைத்தேன்.

மடோனா வந்தார் ஆனால் அவரையும் தங்கச்சி என்று சொல்லிவிட்டனர். குடி, புகையை தயவு செய்து விட்டுவிடுங்கள். நமது வேலை வாய்ப்புகள்‌ பறிக்கப்படுகிறது. தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விஜய்யின் அன்புத் தம்பிகள் நீங்கள் தான் ரோல்மாடலாக இருக்க வேண்டும். நன்றி” என்றார்.

இயக்குநர் கௌதம் மேனன் பேசும் போது, ”நான்‌ கேட்டது யோஹன் அத்தியாயம் ஒன்று, நான் மனசு நிறைந்து சொல்ற விஜய் கொடுத்தது லியோ. மிக்க நன்றி. இந்த குழுவுடன் மிகவும் சவுகரியமாக பணிபுரிந்தேன். மிஷ்கின் சொல்வது போல் விஜய் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க வேண்டும் என்றால் அது யோஹன்தான். வாரிசு படத்தில் நடிக்க வேண்டியது ஆனால் அது நடக்கவில்லை. தளபதி விஜய் ஐ எம் வெய்ட்டிங்” என்று பேசினார்.

அர்ஜுன் பேசும் போது, "இந்த வெற்றி விழாவுக்கு வந்திருக்கும் நம்ம சூப்பர் ஹீரோ தளபதி விஜய் அவர்களே, விஜய்யின் ரசிகர்களுக்கும் வணக்கம். எனக்கு ஒரு சின்ன பயம் இருக்கு. மக்கள் என்னை பார்க்கும் போது ஜெய்ஹிந்த் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இப்போது ’தெறிக்க தெறிக்க’ என்கின்றனர்‌. இது எனது திரை வாழ்வில் வித்தியாசமான படம். த்ரிஷாவுடன் இது இரண்டாவது படம் ஒன்று ’மங்காத்தா’ (ரசிகர்கள் ஆரவாரம்) இப்போது லியோ.

இரண்டு படத்திலும் த்ரிஷாவுடன் காட்சிகள் இல்லை. லியோ படத்தின் தூண்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். லோகேஷ் கனகராஜ் அற்புதமான இயக்குனர். நெகட்டிவ் கதாபாத்திரம் என்று சொன்னபோது தயங்கினேன். ஆனால் நல்ல விதமாக எடுத்துக்காட்டியுள்ளார் லோகேஷ். விஜய்யை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அவரை சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவர். இப்போது இந்திய சினிமா அளவில் கொண்டாடப்படுகிறார். மிகவும் எளிமையானவர்.‌ சிவாஜிக்கு பிறகு நேரம் தவறாமையை விஜய்யிடம் தான் பார்க்கிறேன். நீண்ட வருடங்களாக மௌனம் என்ற ஆயுதத்தை தன்வசம் வைத்துள்ளார். எப்ப ரியாக்ட் பண்ண வேண்டுமோ அப்போது பண்ணுவார். நிஜமாக அரசியலுக்கு கூடிய சீக்கிரம் வந்துவிடுவார். (ரசிகர்கள் ஆரவாரம்). மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. நன்றி.

பின்னர் முதல்வன்‌ பட பாணியில் நீங்கள் விஜய்யிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்று அர்ஜுனிடம் கேட்டபோது? "விஜய்யாக இருப்பது கஷ்டமா, இஷ்டமா இல்ல சுலபமா?" என்று கேட்டார். அதற்கு விஜய், ”வெளியில் இருந்து பார்க்கும் போது கஷ்டமாக இருக்கலாம். ரொம்ப ஈஸிதான் அதற்கு முழு காரணம் நீங்கள் எல்லாம் (ரசிகர்கள்) தான்” என பதில் கூறினார்

தயாரிப்பாளர் லலித் குமார் பேசியது, "சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி. மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி என்ற ரிலீஸ் தேதியுடன் படத்தை தொடங்கினோம். ஊரடங்கு வந்துவிட்டது. பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட நிறைய ஆஃபர் வந்தது. விஜய்யிடம் கோட்டோம்.‌ என் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். எனது ரசிகர்கள் திரையரங்குகளில் தான் படம் பார்க்க வேண்டும் என்றார். நான் கூட இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

படம் எடுப்பது சுலபம், வெளியிடுவது ரொம்ப கஷ்டம். பிரச்சனைகள் எங்கிருந்து எந்த ரூபத்தில் வரும் என்று தெரியாது. ஆடியோ வெளியீட்டு விழா நின்று போனது உங்களை விட எனக்கு தான் கஷ்டத்தை கொடுத்தது. அப்போது இதே இடத்தில் ஒரு வெற்றி விழா நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.‌ விஜய்யிடம் கேட்டதற்கு சரி என்று சொல்லிட்டார். லோகேஷ் கனகராஜ் எனக்கு இரண்டு படத்தையும் வெற்றி படமாக கொடுத்து விட்டீர்கள் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டுள்ளேன்.

லியோ பார்ட் 2 எடுத்தால் ’அப்படிப் போடு’ பாடல் மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று தொகுப்பாளினி லோகேஷிடம் கேட்க அவர்‌ சரி என்று‌ சைகை காட்டினார். அப்படியே‌ லோகேஷை திரும்பி பார்த்த விஜய்‌ சிரிக்க லோகேஷ் கனகராஜும் சிரித்தார். உடனே விஜய் கையால் வாய்ப்பு இல்லை என்று சைகை காட்டினார்.

இதையும் படிங்க: "நடிகர் விஜய் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்க வேண்டும்" - லியோ பட வெற்றி விழாவில் மிஷ்கின் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.