ETV Bharat / state

குழந்தைகளை கவனிக்க தனிக்குழு அமைத்திட வேண்டும்- லதா ரஜினிகாந்த்!

author img

By

Published : Nov 8, 2019, 1:12 PM IST

சென்னை: முதலமைச்சரை சந்தித்த லதா ரஜினிகாந்த் குழந்தைகளை கண்காணிப்பதற்காக மாநில அளவிலான தனிக்குழு அமைத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த்

முதலமைச்சரை சந்தித்தப் பின் செய்தியார்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் கூறியதாவது:

குழந்தைகளைக் கண்காணிப்பதற்கான மாநில அளவிலான தனிக்குழு ஒன்று அமைத்திட வேண்டும் என்பது குறித்து இன்று முதலமைச்சரை சந்தித்து வந்துள்ளேன். இது குறித்து முதலமைச்சர் எங்களுக்குத் தெரியாத பல தகவல்களைத் தெரிவித்தார்.

இந்தச் சமூகமும் பெற்றோர்களும் பரப்பான வாழ்க்கையில் குழந்தைகளை கவனிக்க இயலாத சூழ்நிலையில் அவர்களை மட்டுமே கவனிக்கும் வகையில் ஒரு தனிக்குழு அமைத்திட வேண்டும். அதில் மருத்துவம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் இருத்தல் வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த லதா ரஜினிகாந்த்

அழைப்புதவி எண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் இந்தத் தவறுகள் நடக்கின்றன. நாம் சரியான முறையில் இந்தப் பாதுகாப்பை கொண்டுசேர்க்க வேண்டும்.

இந்தக் குழுவில் அரசு, மருத்துவர்கள், ஆட்சியர் ஆகிய அனைவரும் இருக்க வேண்டும். இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை நான் முன்னோடியாக இந்த முயற்சியை எடுத்துகொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி, கமல் தங்களை தினந்தோறும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் - வைரமுத்து பேச்சு

Intro:Body:

Latha Rajinikanth


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.