ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இல்லாததே இளைஞர்களின் வேலையின்மைக்குக் காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Jul 26, 2023, 8:00 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் வளமை மற்றொரு ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாகாது எனவும்; தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இல்லாததே இளைஞர்கள் வேலையில்லாததற்குக் காரணம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, 2023இல் தேசிய நிறுவன தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநரின் பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு முதல் பத்து இடங்கள் பிடித்த நிறுவனங்களுக்குச் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சவிதா பல்கலைகழகம் எஸ்.ஆர்.எம், அண்ணா, மீனாக்ஷி, தியாகராஜன், பி.எஸ்.ஜி, ராமசந்திரா, ஏசி. சண்முகா, வி.ஐ.டி போன்ற பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகத்தின் வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசையில் இடம் பெற முக்கிய காரணங்கள் மற்றும் கல்லூரியின் சிறப்புகளை ஒவ்வொரு கல்லூரி பேராசிரியர்களும் LED திரை மூலம் விளக்கம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வி நிறுவனங்களை பற்றி தொடர்ந்து பேசி வந்த ஆளுநர் ரவி, 70 சதவீதம் மாணவர்கள் வரலாறு மற்றும் மனிதநேயம் தொடர்பான படிப்புகளை படிக்க முன்வருவதில்லை எனவும், மாணவர்கள் முதலில் வரலாறு மற்றும் மனிதநேயம் தொடர்பான படிப்புகளை படிக்க முன் வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், (Reservation) ரிசர்வேஷனால் தான் பல மாணவர்கள் தங்களுக்கு உரிமையான கல்வியை கற்க ஒரு சிறப்பான வாய்ப்பு அமைகிறது எனவும், இந்த மாநிலத்திற்கு வந்த பிறகு தான் எனக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்ற பல்கலைக்கழகங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை என்று தெரியவந்தது என்றும்; அதை மாற்ற நினைக்கிறேன் என்றார்.

மேலும், சென்னை பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் உள்ளதை குறிப்பிட்டார். Nirf ரேங்கில் வராமல் இருக்கும் உயர்கல்வி நிலையங்கள் செயல்படவில்லை எனப் பொருள் இல்லை என்றார்.

நான் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையங்கள் அர்த்தமுள்ள தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவில்லை எனத் தெரிந்து கொண்டேன் எனவும்; அது சிறந்தது இல்லை; அதை உடைக்க விரும்பினேன் என்றார்.

’மாணவர்கள் வேறு ஒரு கலாசாரங்களை கண்டு, நாம் ஒரு பார்வையில் நிற்கக்கூடாது. ஆனால் தமிழ் பல்கலைக்கழகம் தங்களுக்கு ஒரு தளத்தில் தங்களது கலாசாரத்தை கொண்டு நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களும் அதிகமான வெற்றி பெற்று, உலகமெங்கும் பணிபுரியும் நிலையில் தயாராக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் வளமை மற்றொரு ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாகாது. மாணவர்கள் சாதிக்க மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிகமாக கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது, போதிய தொழிற்சாலை இல்லாததால்தான் தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது எனவும்; இதனால் தான் தமிழ்நாட்டில் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்றார். மற்ற நாடுகளை விட நாம் வேகமாய் முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு அரசியல் சார்பு கூடாதா? - இந்தியக் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.