ETV Bharat / state

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், ''கிடா'' திரைப்படம்!

author img

By

Published : Jul 13, 2023, 7:33 PM IST

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!
மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

சென்னை: ஶ்ரீரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கிடா” (Goat). இப்படம் அறிமுக இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இப்படம் வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ளது. இந்நிலையில் ''கிடா'' திரைப்படம் சர்வதேச விழாக்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 முதல் 20 வரை நடக்கும் 14வது திரைப்பட விழாவில் (Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

பொதுவாக கிராமம் சார்ந்த படங்கள் என்றாலே அதற்கான கதையும், நிகழ்வும் ஆழமான ஒரு கருத்தை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த ''கிடா'' படம் உருவாகி இருப்பது சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க: எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும் - இயக்குநர் வசந்தபாலன்

இப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில், இப்படத்திற்கு உச்சபட்ச பாராட்டுகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்களைக் கவர்ந்துள்ள இப்படம், தமிழக ரசிகர்களைக் கவரும் வகையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ள பூ ராமு நாடகக் கலைஞரும், உறுதுணை நடிகரும் ஆவார். தமிழ்த் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களான ‘நீர்ப்பறவை’, ‘தங்கமீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் உறுதுணை கதாப்பாத்திரமாக பூ ராமு நடித்துள்ளார். தற்போது முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்த 'கிடா' படம் திரைக்கு வருவதற்கு முன்பே இவர் காலமானது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக கூறும் பல்வேறு படங்களில் ஒரு மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்திற்கு தீசன் இசையமைத்து, M.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்.. 'ஜெயிலர்' குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.