ETV Bharat / state

மிக்ஜாம் புயல்: காட்பாடி மார்க்க ரயில்கள் ரத்து - பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 8:31 PM IST

காட்பாடி மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் ரத்து
காட்பாடி மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் ரத்து

மிக்ஜாம் புயல் கன மழை எதிரொலியால் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

காட்பாடி மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் ரத்து

வேலூர்: வங்கக் கடலில் மிக்ஜாம் புயலானது தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழ்நாடு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் விரைவு ரயில், அதிவிரைவு ரயில்களை ரத்து செய்து அறிவித்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி மார்க்கமாகச் செல்லும் விரைவு ரயில்களான காக்கிநாடா விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னைக்கு செல்லவிருந்த லால்பார்க் விரைவு ரயில், இன்டர்சிட்டி விரைவு ரயில், மைசூர் எக்ஸ்பிரஸ், சதாப்தி விரைவு ரயில், ஜோலார்பேட் பயணிகள் ரயில் உள்ளிட்ட சென்னை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை செல்லக்கூடிய ரயில்கள் பெரும்பான்மையாக ஆவடி, பெரம்பூர் வழித்தடங்களில்தான் இயங்கி வருகிறது. தற்போது அந்த வழித்தடங்களில் அமைந்துள்ள ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அந்த தடங்களில் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்பாடியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், காட்பாடி வரை ரயில்களில் வந்த பயணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மற்றும் காட்பாடி ரயில்வே இருப்பு பாதை போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகள் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகளை வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை அனுப்பி வைத்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பயணிகள் அவரவர்களின் ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படது. மேலும் இன்றும், நாளையும்(டிச.4,5) ரயில்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படும் என காட்பாடி ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'MICHAUNG' புயல் மழை எதிரொலி: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.