"அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்"

author img

By

Published : Sep 3, 2022, 8:25 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி

அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி பேசினார்.

அவர் கூறியதாவது, "ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படாததால் அதிகாரம் மையத்தின் ஓபிசி பிரிவினர் தங்களுக்கு உரிய பங்கு பெற முடியவில்லை. ஓபிசி பிரிவினர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்படக்கூடாது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். கிரிமினல் ஏர் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும். மண்டலக்குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளித்திட சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் மீதான 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்பட்டு, மண்டலக்குழு அறிக்கையின்படி ஓபிசி பிரிவினருக்கு 52 விழுக்காடு ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் வழங்கப்படுவதில் உள்ள சிக்கல் சரிசெய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி

ஓபிசி பிரிவினருக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும். ஓபிசி நலனுக்காக போதுமான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஓபிசி பிரிவுகளுக்கான சிறப்பு கூறு திட்டம் உருவாக்க வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கிளைகள் ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் அது பேரிடர்கள் மூலம் மனித குலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.