இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழகத்தை தலை நிமிரச் செய்ய "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை பூர்த்தி செய்து இருக்கிறேன். ஐந்து பாகங்களாக ஐந்தாறு கிலோமீட்டர் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்து இருக்கிறேன். மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பி இருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அது வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். இதை மீறித்தான் சினிமா வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன.
பரப்புரையை தொடங்கும்போது காலின் நல்ல வழி இருந்தது. அதற்கு மக்கள் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிது ஓய்வு கிடைத்து இருக்கிறது ஆகவே, ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்களுக்கு ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடங்குவேன்.
மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக் கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணைய வழியாக பேசுவேன். என் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும், என் குரல் எங்கு எப்போது எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'சாதி, மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களியுங்கள்' - கமல்ஹாசன்