சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய அரசு அமைந்தவுடன் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அரசும் தடை விதித்தது.
கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளிக்கக்கோரி பல இடங்களில் கிராம சபை மீட்புப் பயணம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று (செப்.20) தமிழ்நாடு அரசு அக்டோபர் 2ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளித்தது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிராம சபை கூட்டம் - அரசு அனுமதி