ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. கே.பாலகிருஷ்ணன் பேட்டி

author img

By

Published : Aug 17, 2022, 5:15 PM IST

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டவோம் எனும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை மோடி அரசுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தமிழ்நாடு முழுவதும் ஐம்பது ஆயிரம் இல்லங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5 வரை மோடி அரசின் 8 ஆண்டு கால மோசமான நடவடிக்கைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தின் மூலம் 50 லட்சம் இல்லங்களில் இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

இலவசங்கள் கூடாது என்னும் மோடி அரசை வன்மையாக சிபிஎம் கண்டிக்கிறது. உலகத்திலேயே கார்பரேட்களுக்கு வரிகளை குறைத்து கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது. 15 நாட்களுக்கு சிபிஎம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மேற்கொள்வதோடு, சென்னையில் செப்டம்பர் 5 ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிஎம் சார்பிலான மனித அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கை வெளியிட்டு பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது என்றார்.

கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான். ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. தடையங்களை அழிக்க வன்முறைக்கு பின்னால் பள்ளி நிர்வாகமே இருக்கலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பால் புலன் விசாரணை ஒரு மாதம் முடங்கி போய் உள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தேர்வுக்கு போன மாணவர்களை கூட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக பட்டியலின மாணவர்களை சொல்லி சொல்லி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் பள்ளி நிர்வாகத்தின் பிள்ளைகளை இன்னும் காவல்துறை, சிபிசிஐடி என எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்காதது சந்தேகம் அளிக்கிறது. கள்ளக்குறிச்சி விவரகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முறையாக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவின் மேலிடம் அழுத்தத்தால் தான் காவல்துறை செயல் இழந்தது என குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டிக்கு சென்ற அண்ணாமலை ஏன் கள்ளக்குறிச்சி சென்று பெற்றோர்களை சந்திக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் பாஜக ஆர்.எஸ்.எஸ் என்பதால் அந்த விவகாரம் தொடர்பாக அதனை கண்டு கொள்ளாமல் கல்ல நாடகம் போடுகிறார் அண்ணாமலை என்றார்.

அத்தோடு பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையம் உள்ளிட்ட எந்த வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் பாதிப்பு இல்லாத வகையில் மக்களின் முழு ஒத்துழைப்பு பெற்று தான் செயல்படுத்த வேண்டும். திமுக மற்றும் பாஜக தமிழ்நாட்டில் நெருங்கி வருகிறது என தேவையற்ற சந்தேகங்களை பாஜக எழுப்பி வருவதற்கான தெளிவான பதிலை வெளிச்சம் போட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்களிடையே பாஜக எழுப்பி வரும் தேவையற்ற சந்தேகங்களை தவிடு பொடி ஆக்கியது போல் முதலமைச்சர் அமைந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.