ETV Bharat / state

களைகட்டிய கலைஞர் 100.. முன்னணி பிரபலங்கள் பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 6:49 PM IST

Updated : Jan 6, 2024, 10:46 PM IST

chennai
chennai

22:40 January 06

22:28 January 06

Kalaingar 100 Live: "கருணாநிதி குறித்து பேச சொன்னால் எங்கு ஆரம்பிப்பது என்று எனக்கு தெரியாது" - நடிகர் ரஜினிகாந்த்!

கலைஞர் குறித்து பேச சொன்னால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது எனத் எனக்கு தெரியாது. அந்தளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

22:22 January 06

Kalaingar 100 Live: "கருணாநிதி சினிமாவில் தொடர்ந்திருந்தால் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜியை உருவாகி இருப்பார்" - நடிகர் ரஜினி!

கலைஞர் கருணாநிதி அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜியை உருவாகி இருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

22:19 January 06

Kalaingar 100 Live: "கலைஞரின் உடன் பிறப்புகளே என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே" - உரையை தொடங்கிய ரஜினி!

கலைஞரின் உடன் பிறப்புகளே என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே என உரையை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

22:07 January 06

Kalaingar 100 Live: "அந்த துணிச்சல் கருணாநிதிக்கு இருந்தது" - நடிகர் கமல்ஹாசன்!

நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என அந்த நேரத்தில் கூறும் துணிச்சல் கலைஞர் கருணாநிதிக்கு இருந்தது என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

21:56 January 06

Kalaingar 100 Live: "சினிமாவின் பலத்தை முழுவதுமாக உணர்ந்தவர் கலைஞர் கருணாநிதி" - நடிகர் கமல்ஹாசன்!

சினிமா என்பதின் பலத்தை முழுவதுமாக உணர்ந்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் மிகையாகது. பாடல்களின் பிடியில் சிக்கி இருந்த சினிமாவை கணல் கக்கும் வசனங்களாக உருவாக்கியது கலைஞர் கருணாநிதிதான் என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

21:51 January 06

Kalaingar 100 Live: "நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்க்காக நன்றி" - நடிகர் கமல்ஹாசன்!

என்னுடைய நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திய அரசியல் பண்புக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன் முதல்வரின் இந்த பண்பு எங்கிருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் இந்த வணக்கம் கலைஞருக்கும் உறுத்தானதுதான் என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

21:39 January 06

Kalaingar 100 Live: "கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் எனது தமிழ் ஆசான்கள்" - நடிகர் கமல்ஹாசன்!

எனது தமிழ் ஆசான்கள் 3 பேர். கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். இவர்கள் 3 பேரும் கட்டி எழுப்பியதில் இந்த விழா நடைபெறுகிறது என நடிகர் கமல்ஹாசன்

21:35 January 06

Kalaingar 100 Live: "கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை" - நடிகர் கமல்ஹாசன்!

கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

21:32 January 06

Kalaingar 100 Live: நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார்!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார்.

21:24 January 06

Kalaingar 100 Live: "கை ரிக்‌ஷாவை ஒழித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி" - நடிகர் சூர்யா!

1952ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் கை ரிக்‌ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். அப்போது சிவாஜியிடம் "நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்" என்று சொல்லும் வசனம் இடம்பெற்றிருக்கும். பராசக்தி படம் வெளியாகி 17வருடங்களுக்குப் பிறகு ஆட்சி அமைத்து, கை ரிக்‌ஷாவை ஒழித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

21:13 January 06

Kalaingar 100 Live: "அரசியல் ஒருபுறம் இருந்தாலும், சினிமாவை அவர் ஒருபோதும் கைவிடவில்லை" - நடிகர் சூர்யா!

அரசியல் ஒருபுறம் இருந்தாலும், சினிமாவை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. அதனால் தான் அவரை மரியாதையாக 'கலைஞர்' என கூறி வருகிறோம் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

21:05 January 06

Kalaingar 100 Live: என்னை மன்மதராசா என அழைத்தார் - நடிகர் தனுஷ்!

முதன் முதலில் சினிமா படப்பூஜையின் போதுதான் அவரை சந்தித்தேன். அப்போது என்னை வாங்க மன்மதராசா எனக்கூறி அழைத்தார் என தனுஷ் கூறியுள்ளார்.

20:56 January 06

Kalaingar 100 Live: "கலைஞர் மறைந்தாலும் இன்னும் நம்மோடுதான் உள்ளார்" - நடிகர் தனுஷ்!

கலைஞர் மறைவைப் பற்றி யாராவது பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது என தனுஷ் பேசியுள்ளார்.

20:46 January 06

Kalaingar 100 Live: "கலையை அரசியலாகவும் அரசியலை கலையாகவும் பார்த்தவர்" - நடிகர் சூர்யா!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த நடிகர் சூர்யா, "கலைஞர் அரசியலுக்காக அர்ப்பணித்த வருடங்களுக்கு ஈடாக கலைக்கு அர்ப்பணித்த வருடங்களையும் முக்கியமானதாக பார்க்கிறேன். சினிமா என்பது ஒரு ஆயுதம். அதனை நல்வழியில் பேசினால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைத்தவர் கலைஞர் தான். கலைஞர் முதலில் ஒரு படைப்பாளி. இந்த கலைஞர் 100 விழா மிக முக்கியமானதாக பார்க்கிறேன்" என்றார்.

20:40 January 06

Kalaingar 100 Live: எல்இடி திரைகள் இல்லாததால் சிரமம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் எல்இடி திரைகளின் இல்லாததால் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

20:24 January 06

Kalaingar 100 Live: காலியாக இருக்கும் இருக்கைகள்!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு திரைப் பிரபலங்கள் வருகை தந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன.

20:08 January 06

Kalaingar 100 Live: கலைஞர் 100க்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் ஜெயம்ரவி மற்றும் சிவகார்த்திகேயன் வருகை தந்துள்ளனர்.

20:03 January 06

Kalaingar 100 Live: கோவப்பட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாரா தனது பவுன்சர்களை வண்டியில் ஏற்ற மறுத்ததற்கு கோவப்பட்டுள்ளார்.

19:47 January 06

Kalaingar 100 Live: நடிகர் தனுஷ் வருகை!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் தனுஷ் வருகை தந்துள்ளார்.

19:40 January 06

Kalaingar 100 Live: நிகழ்ச்சிக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் பா.ரஞ்சித், நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

19:37 January 06

Kalaingar 100 Live: சென்னை மேயர் வருகை!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சென்னை மேயர் பிரியா ராஜன் வருகை தந்துள்ளார்.

19:22 January 06

Kalaingar 100 Live: நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் டி.ராஜேந்தர்!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் மற்றும் நடிகர் பிரசாந்த் வருகை தந்துள்ளனர்.

19:12 January 06

Kalaingar 100 Live: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வருகை!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர்

19:09 January 06

Kalaingar 100 Live: இயக்குநர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் வருகை!

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு இயக்குநர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை கெளதமி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

19:01 January 06

Kalaingar 100 Live: நடிகை நயன்தாரா வருகை!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகை நயன்தாரா, சோனியா அகர்வால் மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

18:33 January 06

களைகட்டிய கலைஞர் 100.. முன்னணி பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் 'கலைஞர் நூற்றாண்டு விழா' சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் உள்ள 24 சங்கங்களும் இணைந்து இந்த பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு, கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர்க் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Last Updated :Jan 6, 2024, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.