DRDO நிறுவனத்தில் 1,901 காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Sep 18, 2022, 2:19 PM IST

DRDO நிறுவனத்தில் 1,901 காலிப்பணியிடங்கள்

DRDO கீழ் இயங்கிவரும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (DRDO-CEPTAM) வெளியிட்ட அறிவிப்பில் Senior Technical Assistant-B, Technician-A ஆகிய பணிகளுக்கு என உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: பணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் (DRDO-CEPTAM) Agriculture, Automobile Engineer, Chemistry போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Technical Assistant-B பணிக்கு 1,075 பணியிடங்களும், Technician-A பணிக்கு 826 பணியிடங்களும் என மொத்தமாக 1,901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: Senior Technical Assistant-B பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Technician-A பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.09.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: Senior Technical Assistant-B பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Pay Matrix Level-6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400 முதல் ரூ.1,12,4000 வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technician-A பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Pay Matrix Level-2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 03.09.2022 முதல் 23.09.2022 தேதிக்குள் https://www.drdo.gov.in/ceptm-advertisement/1782 என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: BEL நிறுவனத்தில் இன்ஜினியர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.