சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நேற்று (செப். 2) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்களிப்பு" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதன் பின் மாநாட்டில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்ன தான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம்.
முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அடுத்ததாக, காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அதன் பின் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. இது குறித்து கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று என் கையில் பேனாவைத் தந்தார்கள்.
மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தேன். இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினருக்கு (த.மு.எ.க.ச) எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: One Nation One Election: ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறோம்’ - ஓபிஎஸ்
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம். சிறப்புரை ஆற்ற எனக்கு வாய்ப்பளித்த இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று மாநாட்டின் பெயரை வைத்துள்ளீர்கள், பாராட்டுகிறேன். சில விஷயங்களை எதிர்க்க முடியாது.
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
— Udhay (@Udhaystalin) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய… pic.twitter.com/KufIdPeNvh
">தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
— Udhay (@Udhaystalin) September 2, 2023
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய… pic.twitter.com/KufIdPeNvhதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
— Udhay (@Udhaystalin) September 2, 2023
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய… pic.twitter.com/KufIdPeNvh
அதை ஒழிக்க வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கரோனாவை எதிர்க்க முடியாது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதே போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும். சனாதனத்தை எதிர்ப்பதை விட அது ஒழிக்கப்பட வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: கோவையில் மாபெரும் கல்வி கடன் முகாம்கள்.. எங்கெல்லாம் நடக்கும் நடக்கிறது என முழுவிபரம்