ETV Bharat / state

திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!

author img

By

Published : Jun 4, 2022, 8:07 AM IST

சென்னையில் திருமணமான ஆறு மாதங்களில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை..!
திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை..!

சென்னை: திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்(22), மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி(20), என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் பெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இன்று(ஜூன்03) காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை கடையும் திறக்கவில்லை, வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து கதவை தட்டியும் திறக்காததால் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் "எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் உயிரை மாய்த்துகொள்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை" என எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை ஏதும் அணுகாமல் இருந்து வந்ததாகவும் தங்களுக்கு குழந்தை பிறக்காது என முடிவு மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் எலக்ட்ரிக் ரம்பம் வாங்கிக் கொலை.. ஐ.டி. ஊழியர் வழக்கில் பகீர் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.