ETV Bharat / state

கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

author img

By

Published : Apr 1, 2022, 2:59 PM IST

திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யப்படும் போது கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்கள் : பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவுHRCE Ordered give priority to traditional artists for Festivals in temples
கோயில் திருவிழாக்கள் : பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு HRCE Ordered give priority to traditional artists for Festivals in temples

சென்னை: திருக்கோயில்களின் தல வரலாறுகள் போன்றவற்றைத் தற்காலிக தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டு களித்து மகிழும் வண்ணமும் பாரம்பரிய கலை, கலாச்சார, ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் போது தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் இசை பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டு துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பகுதியில் உள்ள கலைஞர்களை கொண்டு நடத்திட வலியுறுத்தபட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

மேலும், திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும், திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யப்படும் போது கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயிலில் படிகள் அமைக்கும் பணி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.