ETV Bharat / state

தொடர் பணம் பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது!

author img

By

Published : Dec 29, 2022, 10:44 PM IST

தொடர் பணப்பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது
தொடர் பணப்பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

கோயில் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பறித்த இந்து மக்கள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (63), அதே பகுதியில் இயந்திரங்களை வாடகை விடும் கடையை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், இவருக்கும், இந்து மக்கள் கட்சி பிரமுகரான மகேஷ் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சங்கரிடம் நட்பாகப் பழகி வந்த மகேஷ், பின்னர் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகக் கூறி சங்கரை மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இந்து மக்கள் கட்சியில் சென்னை மாநகர துணைத் தலைவராக தான் இருப்பதாக கூறி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் வரை சங்கரிடம் மகேஷ் பணம் பறித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அவ்வை சண்முகம் சாலை சுதந்திர நகர் வழியாகச் சென்று கொண்டிருந்த சங்கரிடம், மேலும் 20ஆயிரம் மாமூல் கேட்டு மகேஷ் மிரட்டியதால், இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சட்டவிரோதமாகத் தடுத்தல், மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இந்து மக்கள் கட்சி சென்னை மாநகர துணை தலைவர் மகேஷை போலீசார் கைது செய்தனர்.

தொடர் பணப்பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது
கைது செய்யப்பட்ட மகேஷ்

கைது செய்யப்பட்ட மகேஷிடம் நடத்திய விசாரணையில், தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் மக்களிடம் இந்து மக்கள் கட்சி பிரமுகர் மகேஷ் மாமூல் தராவிட்டால் இங்கு குடியிருக்க முடியாது எனக்கூறி தொடர்ந்து மிரட்டி பல பேரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் ஏற்கனவே மகேஷ் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சி பிரமுகர் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படங்க: Fact Check: முதல்வர் நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர்களா? நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.