ETV Bharat / state

ஆளுநர் கட்டுப்பாடோடு நடந்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது - அமைச்சர் பொன்முடி காட்டம்

author img

By

Published : May 30, 2023, 7:49 PM IST

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை: ஆளுநர் கட்டுப்பாடோடு நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது என்றும், துணைவேந்தர்கள் ஆளுநர் அழைக்கின்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தடை இல்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியினைத் தாெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தம் 2 லட்சத்து 46ஆயிரத்து 895 மொத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1லட்சத்து 7 ஆயிரத்து 299இடங்கள் உள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் நேற்று முதல் நாளில் 643 பேர் மாநிலம் முழுவதும் 5 சதவிகித சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலக்கல்லூரியில் 40ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலக்கல்லூரியில் 1048 இடங்களுக்கு இத்தனை விண்ணப்பங்கள் வெவ்வேறுப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. சென்னையை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு கலந்தாய்வு நடக்கும்.

தமிழக கல்லூரிகளின் மேற்பார்வை: ராணி மேரி கல்லூரியில் மொத்தம் 1353 பேர் சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் சிறப்பு பிரிவினிருக்காக மொத்தம் 73 இடங்கள்தான் உள்ளன. அதிலும், இதுவரை 41 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் ஒரு பாடப்பிரிவிற்கு கலந்தாய்வு நடக்கும் போது, வேறுப் பாடப்பிரிவிற்கு கலந்தாய்வு நடக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் ஒரு மாணவர் வேறு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்திருந்தாலும் கலந்தாய்வில் கலந்துக் கொள்வதில் சிரமம் இருக்காது. கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளுக்கு இலவச விடுதி கல்லூரி கட்டணம் அறிவித்ததின் பெயரில் அதிக விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த திட்டம் காரணமாக மகளிர் சேர்க்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15 சதவீதம் விண்ணப்பம் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு விண்ணப்பத்தில் மாணவர்கள் 5 கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம் 50 ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் செலுத்த வேண்டியதில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியாக உள்ளது. மாநிலக் கல்லூரியில் 2000 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்படும். இது மட்டுமின்றி 63 கோடி செலவில் நடைபெற்று வரும் இந்த பணிகளையும் பார்வையிட்டோம். மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் தங்குவதற்காக தனியாக விடுதி கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் கல்லூரி வளாகத்திற்குள் கட்டப்பட்டு வரும் விடுதிக்கான கட்டுமான பணிகளையும் பார்வையிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்கள் உள்ளிட்டோரை அழைத்து பாடத்திட்டங்கள் குறித்து நாளை ஆலோசனை செய்ய உள்ளோம்.

அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல், பாலிடெக்னிக் என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் திறன் வளர்க்கும் பாடத்திட்டத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சிங்கப்பூரில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கவும் அங்கு உள்ள மாணவர்கள் இங்கு படிக்கவும் இங்குள்ள மாணவர்கள் அங்கு படிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.

மாநில கல்விக் கொள்கை vs தேசியக் கல்விக் கொள்கை: மாநில கல்விக் கொள்கை பற்றி விவாதிப்பதற்காக நாளை ஆலோசனைக் கூட்டம் உள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் காெள்கை குழுவினரும் கலந்துக் கொள்ள உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் வரும் 5 ஆம் தேதி தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க கூட்டியுள்ள கூட்டத்தில் துணைவேந்தர்கள் கலந்துக் கொள்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அது அவர்களின் விருப்பம்.

எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மாநிலத்தின் கல்வி கொள்கையை வகுக்க முன்னுரிமை உண்டு. கர்நாடகாவிலும் தேசியக்கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளுநர் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது. துணைவேந்தர்கள் ஆளுநர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவரது விருப்பம் என்று பதில் அளித்தார். அரசு கலை கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் மீது தீர்ப்பு வந்த உடன் பணிகள் துவக்கப்படும். வானூரில் கடந்த ஆட்சியில் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதே தவிர கட்டிடம் கட்டப்படவில்லை. அதற்கும் சேர்த்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்துக் கல்லூரிகளுக்கும் கட்டிடங்கள் கட்டப்படும். பொறியியல் துறைகளில் இப்போது இருக்கும் பாட பிரிவுகள் மட்டுமின்றி மற்ற பிரிவுகளுக்கும் தமிழ் வழி தொடரும்” என பல்வேறு திட்டங்களையும் கலாந்தாய்வு நடத்தப்படுவதற்கான விதிகளையும் விவரித்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.6,500 கோடி அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.