போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் உரிமம் ரத்து - காவல்துறை எச்சரிக்கை

author img

By

Published : May 24, 2022, 7:26 AM IST

ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்!

ஹெல்மெட் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருசக்கர வாகன பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் மீது அபராதம் செலுத்தும் முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வேப்பேரி ஈவேரா சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சாரட்கர் நேரில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னையில் சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதிக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாததாலேயே நடப்பது கண்டறியப்பட்டது. அதிலும் பின் இருக்கை பயணிகள் அதிகம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் 129 மோட்டார் வாகன சட்டத்தின்படி பின் இருக்கை பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்!

இந்த சிறப்பு தணிக்கையில் இதுவரை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பின் இருக்கை பயணி ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும். மேலும் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது போலீசாரின் நோக்கமில்லை. பாதுகாப்பாக பொதுமக்கள் பயணிக்க வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தார்.

இருசக்கர வாகனங்கள் பின் இருக்கையில் அமரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அபராதம் வசூலிக்கும் போது வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்காணிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட பாடி வோர்ன் கேமரா போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தொடர்ந்து ஹெல்மெட் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்” என போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.