ETV Bharat / state

தலைக்கவசம் வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jun 13, 2019, 8:02 AM IST

ஹெல்மெட் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் வாகன விபத்தை தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது தலைக்கவசம் அணியாமல் பயணித்தது தொடர்பாக ஆறு நாட்களில் 21 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஸ்வைபிங் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறையை வங்கிகளுடன் இணைக்கும் பணி முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும் ஸ்வைபிங் இயந்திரம் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, 2004இல் விபத்து மரணங்கள் 6,419 ஆக இருந்தது, 2018இல் 21,300 ஆக அதிகரித்துள்ளதே என நீதிபதிகள் கேட்டபோது, தலைக்கவசம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு தற்போது சிறப்பாக உள்ளது இதே நிலையில் தொடர்ந்து செயல்பட்டால் முழுமையாக தலைக்கவசம் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்டங்களில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு (SSI) ஏன் வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநிலம் முழுவதும் போக்குவரத்து உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Intro:Body:

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பெருகிவரும் வாகன விபத்தை தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,  சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வாகன சோதனைக்கான புதிய செயலியால் இதுவரை 96 புகார்கள் பெறப்பட்டு 51 புகாரில் வழக்கு பதிவும்,  45 புகாரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.



சென்னையில் கடந்த 6 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 21 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.



தற்போது 6 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஸ்வைபிங் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறையை வங்கிகளுடன் இணைக்கும் பணி முடிந்ததும் தமிழகம் முழுவதும் ஸ்வைபிங் எந்திரம் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.



இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 2004ல் விபத்து மரணங்கள் 6419 ஆக இருந்தது, 2018ல் 21,300 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடப்பதை முழுமையாக தடுக்க முடியாது ஆனால் குறைக்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



ஹெல்மெட் விவகாரத்தில் அரசின் செயல்பாடு தற்போது சிறப்பாக உள்ளதால், அதே நிலையில் தொடர்ந்து செயல்பட்டால் முழுமையாக ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.



மேலும், மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு (SSI) ஏன் வழங்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநிலம் முழுவதும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் காலி பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 21 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



இன்றைய வழக்கு விசாரணையில் போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர் மற்றும் துணை ஆணையர் அபிநவ் நேரில் ஆஜராகினர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.