ETV Bharat / state

உணவு பொருட்கள் மீது புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் - மா.சு அறிவிப்பு

author img

By

Published : Jan 12, 2023, 6:18 PM IST

Etv Bharatஉணவு பொருட்கள் மீது புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் - மா.சு அறிவிப்பு
Etv Bharatஉணவு பொருட்கள் மீது புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் - மா.சு அறிவிப்பு

உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்க்க, தரத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை தொடர்பு எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வகங்களை பார்வையிட்ட பிறகு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்க்க, தரத்தை கண்காணிக்க நடமாடும் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே உணவு பகுப்பாய்வு மையம் சென்னை கிண்டி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சை போன்ற மாவட்டங்களில் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

கடந்த 2021 மே முதல் 2022 வரை 34,980 உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டததுல் 2266 பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் கண்டறியப்பட்டது. தரமற்ற உணவு மாதிரிகள் என 7405 கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை உரிமையியல் வழக்கின் கீழ் 6542 வழக்குகள் பதியப்பட்டு 6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 1266 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டு 2.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

2022 - 23 மானியகோரிக்கையில் அறிவிப்பு 89ன் கீழ் 1.92 கோடி மதிப்பில் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் துவக்கப்படும் என தெரிவித்தார்.38 மாவட்டங்களுக்கும் சென்று குடிசை பகுதிகள், கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படும் என்றும் குளிர்பானங்கள், பால் உணவு பொருட்கள், பொடி வகைகள் சார்ந்த என அனைத்து பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 9444042322 உணவு பாதுகாப்பு துறை தொடர்பு எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2020 வரை 15 ஆயிரம் நியமனங்கள் நடைபெற்றுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக 10 % மேல் சான்றிதழ் சரிபார்ப்பு, ஒதுக்கீடு நறைமுறை இல்லாமல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் முதலமைச்சர் மாற்று ஏற்பாடு செய்து மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பணிபுறிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் செவிலியர்களின் சொந்த ஊரின் அருகிலே பணியாற்றும் வகையிலும் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சங்கத்தினர் மட்டும் அரசின் கோரிக்கையை ஏற்றுகவில்லை மற்ற சங்கத்தினர் வேலைக்கு செல்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களும் அரசின் கோரிக்கையை ஏற்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாலை விபத்தில் மாரடைப்பா? உயிரிழப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.