ETV Bharat / state

சென்னை நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் 114 நபர்களுக்கு கரோனா!

author img

By

Published : Jan 4, 2021, 6:09 AM IST

நட்சத்திர விடுதிகளில் கரோனா
நட்சத்திர விடுதிகளில் கரோனா

சென்னை: விடுதிகளில் பணிபுரியும் 125 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் படிப்படியாக கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை ஐஐடி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஐஐடி கல்லூரியில் மட்டும் படிப்படியாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது, அது ஒரு கரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியது. பின்னர் பல்வேறு நடவடிக்கையால் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

நட்சத்திர விடுதிகளில் கரோனா

இன்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியான ஐடிசி கிராண்ட் சோழாவில் பணிபுரியும் ஒரு நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் நபர்களுக்கு பரிசோதித்ததில் படிப்படியாக கரோனோ பாதிப்பு அதிகரித்தது.

மாநகராட்சி மருத்துவ முகாம் அமைத்து அந்த பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை செய்தது டிசம்பர் 15 முதல் நேற்று (ஜன.02) வரை 609 பரிசோதனை மாதிரிகளை மாநகராட்சி சேகரித்து. அதில் 85 நபர்களுக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
இதனால் மாநகராட்சி சென்னையிலுள்ள சுமார் முப்பத்தி ஐந்து நட்சத்திர விடுதிகள், சுமார் 900 விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கு பணிபுரியும் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது.
இதில், நட்சத்திர விடுதியில் பணிபுரியும் 2226 நபர்களில் 1,623 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 114 நபர்களுக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள விடுதிகளில் 4190 நபர்களில் 2769 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 11 நபர்களுக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டது.
மொத்தமாக 4392 நபர்களில் பரிசோதித்ததில் 125 நபர்களுக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பரிசோதித்ததில் 80 சதவீதமான நபர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நட்சத்திர விடுதிகள் மற்றும் விடுதிகள் அரசு அறிவுறுத்தும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிலவரம்: ஒரே நாளில் 867 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.