ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதம்

author img

By

Published : Dec 2, 2022, 10:16 AM IST

ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதம்

வடபழனி அருகே மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதமடைந்தது.

சென்னை: வடபழனி ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிக்காக பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இன்று (டிச.2) காலை 5.15 மணியளவில் ரத்னா ஸ்டோர் அருகே ராட்சத கிரேன் மூலமாக பள்ளம் தோண்டும் பணியானது நடந்து வந்தது.

திடீரென ராட்சத கிரேன் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக சென்ற 159a எண் கொண்ட அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தது. பயணிகள் இல்லாமல் சென்ற பேருந்து என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால், விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த பழனி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சேதமடைந்த பேருந்தை வடபழனி போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர், விபத்து நிகழ்ந்தது தொடர்பாக கிரேனை இயக்கிய வடமாநிலத்தை சேர்ந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கியதால் விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஒரிஜினல் லேடி சூப்பர் ஸ்டார் சில்க் ஸ்மிதாவின் பிறந்த தினம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.