ETV Bharat / state

குறைந்தது தங்கத்தின் விலை.. தீபாவளிக்கு மறுநாள் தங்கம் வாங்க ரெடியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 12:14 PM IST

Today Gold Rate in Chennai
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

Today Gold Rate in Chennai: சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 44 ஆயிரத்து 720க்கு விற்பனை ஆகி வருகின்றது.

சென்னை: சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,590க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கும் விற்பனை ஆகின்றன. இதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.75.40-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.

மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. தற்போது சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தால் உள்நாட்டு பொருளாதாரச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,590
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,720
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,098
  • 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.48,784
  • 1 கிராம் வெள்ளி - ரூ.75.40
  • 1 கிலோ வெள்ளி - ரூ.75,400

இதையும் படிங்க:உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.