ETV Bharat / state

தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் அதிரடியாக குறைந்த விலை.. ஒரு சவரன் எவ்வளவு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 1:04 PM IST

ஒரே நாளில் ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை

Today gold rate in chennai: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்று மேலும் ரூ.360 குறைந்து சவரன் 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச பொருளாதார சுழ்நிலை, அரசியல், மற்றும் பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில், நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவாக தங்கத்தின் முதலீடு அதிகமானதால், தங்கத்தின் விலை அதிகளவில் அதிகரித்ததும், ஒரு நாள் சிறு அளவு குறைந்தும் என ஏற்றம் இறக்கத்துடன் காணபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (நவ.11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 5600க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.44,800 க்கும் விற்பனை ஆகி வருகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்தது. கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76 க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.76,000 க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தினமும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 1 மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கம் விலையானது, திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. செவ்வாய்க்கிழமை அன்று சவரனுக்கு ரூ.240 குறைந்தது. புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறந்துள்ளது. வியாழைக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது. அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனையான நிலையில், இன்று காலை சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்ததால், சென்னையில் சவரனுக்கு ரூ.360 வரை குறைந்து ரூ.44 ஆயிரத்து 800க்கு விற்பனையாகிறது.

இன்றைய (நவ.11) நிலவரப்படி தங்கத்தின் விலை

  • 1கிராம் தங்கம்(22 கேரட்) - ரூ.5,600
  • 1சவரன் தங்கம்(22 கேரட்) - ரூ.44,800
  • 1கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ 6,070
  • 8 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ48,560
  • 1கிராம் வெள்ளி - ரூ.76
  • 1கிலோ வெள்ளி - ரூ.76,000

இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. மீட்புப் பணியிலிருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.