ETV Bharat / state

குறைந்த கரோனா... 2ஆண்டுகளுக்குப்பின் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

author img

By

Published : Aug 31, 2022, 7:52 PM IST

Etv Bharat  விநாயகர் சதுர்த்தி
Etv Bharat விநாயகர் சதுர்த்தி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி சரியாக கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மக்கள் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (ஆக-31) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி அன்று தெரு முனைகளில் பல வகையான சிலைகள் வைத்து வழிபடுவது, அதே போன்று வீட்டில் களி மண்ணால் செய்யப்பட்ட சின்ன பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி வைத்து தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்று காரணமாக தெருமுனைகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அரசு தடை விதித்தது.

இதனால், வீட்டிலேயே சிறிய களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபாடு செய்து அருகில் உள்ள கிணற்றிலோ அல்லது நீர்நிலைகளிலோ மக்கள் கரைத்தனர். தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், இந்த ஆண்டு முதல் தெருமுனைகளில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட அரசு அனுமதி வழங்கியது.

சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்டப்பகுதிகளில் அதிகாலையில் விநாயகர் சிலைக்கு மகா ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 1.25 லட்சம் சிலைகளும் சென்னையில் 5ஆயிரத்து 200 சிலைகளும் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வீடுகளில் மண் சிலைகளை வைப்பதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 6 மணியளவில் விநாயகருக்கு பால் அபிஷேகம், மஹாஹோமம் நடத்தி, சிறப்பு தெய்வ வழிபாடு செய்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா பெருந்தொற்று காரணமாக, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க அரசு தடை விதித்தது. தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி சென்னையில் கொளத்தூர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு சிறப்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில், பஞ்சலோக வேல் விநாயகர் மற்றும் தரணி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புத்தர் தான் விநாயகரா?... பௌத்த மரபை பின்பற்றும் சந்திர போஸ் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.