ETV Bharat / state

மீன் விற்பனை செய்யும் இடத்தை மாற்ற மீனவர்கள் கோரிக்கை

author img

By

Published : Jul 21, 2021, 12:31 AM IST

சென்னை:காசிமேட்டில் மீன் விற்பனை செய்யும் இடத்தை மாற்றித் தரும்படி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காசிமேடு
காசிமேடு

சென்னை காசிமேட்டில் மீன்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசால் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்பு காசிமேட்டில் இருக்கக்கூடிய யார்டு பகுதியில் மீன் விற்பனை தற்காலிகமாக நடக்கிறது.

ஆனால் புதிதாக மாற்றி அமைத்துக் கொடுத்த இடத்தில் மீன்களை விற்பனை செய்வதற்கு போதுமான வசதிகள் இல்லை. படகுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து வெகு தூரம் எடுத்துக்கொண்டு வந்து விற்பதால் மீனவர்களும் வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

எனவே மீண்டும் பழைய இடத்தில் மீன்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாட்ய் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் புதிய இடம் அருகே படகுகளை கொண்டு வரும்போது படகுகள் கடலின் அடியில் உள்ள பாறைகளில் தட்டி படகுகள் சேதம் அடைகின்றன. அதனால், மீன்வளத்துறை அலுவலர்கள் இதனை கருத்தில் கொண்டு மீன் விற்பனை செய்யக்கூடிய இடத்தை அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய பழைய இடத்திற்கே மாற்றி தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.