ETV Bharat / state

தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

author img

By

Published : Jan 5, 2023, 11:38 AM IST

Updated : Jan 5, 2023, 12:10 PM IST

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.

சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (ஜன.5) வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் - 3, 04,89, 066 பேர்

பெண் வாக்காளர்கள் - 3,15,43,286 பேர்

மூன்றாம் பாலினித்தவர் 8027

அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி:

சோழிங்கநல்லூர் - 6,66,295

கவுண்டம்பாளையம் - 4,57,408

குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி:

துறைமுகம் - 1,070, 125

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் - 3,310

18, 19 வயதுக்குட்பட்டவர்கள் - 4,66,374 பேர்

வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க - elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கோடியே 82 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் கொண்ட துறைமுகம் தொகுதி - 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 பேர் உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மறைவின் விவரங்கள் இன்று கிடைத்தவுடன் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவிற்கு மெசஞ்சர் மூலமாகவும், தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்ல, அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம்.

அதன் பிறகாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. தேர்தல் ஆணையம் கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1. தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (05.01.2023) வெளியிடப்பட்டுள்ளன.

2. 01-01-2023 - தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 08-11-2022 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 09-11-2022 ஆம் தேதியிலிருந்து 08-12-2022ஆம் தேதிவரை பெறப்பட்டன.

3. மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,141 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,70,291: பெண்கள் 5,46,225: மூன்றாம் பாலினத்தவர் 625) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,02,136 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (5,32,526), இறப்பு (2,47,564) மற்றும் இரட்டைப் பதிவு (21,946) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும் 2,15,308 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,13,047: பெண்கள் 1,02,165: மூன்றாம் பாலினத்தவர் 96) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

4. சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866 பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

5. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27 - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,34,081 : பெண்கள் 3,32,096 : மூன்றாம் பாலினத்தவர் 118) இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117 - கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,27,835: பெண்கள் 2,29,454: மூன்றாம் பாலினத்தவர் 119).

6. மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18 - துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,70,125 ஆவர். (ஆண்கள் 88,396 பெண்கள் 81,570 மூன்றாம் பாலினத்தவர் 59). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164 - கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 ஆவர் (ஆண்கள் 85,652: பெண்கள் 89,474 மூன்றாம் பாலினத்தவர் 2).

7. 05-01-2023 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 8 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Last Updated :Jan 5, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.