ETV Bharat / state

மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை!

author img

By

Published : Jan 23, 2020, 1:48 PM IST

rehersalfunction
rehersalfunction

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு முப்படை வீரர்களின் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.

குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமையும், இரண்டாம் கட்ட ஒத்திகை நேற்று காலையும், இறுதி கட்ட ஒத்திகை இன்று காலையும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், முதலில் தமிழ்நாடு காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வர, அணிவகுப்புக்கு நடுவே தமிழ்நாடு முதலமைச்சரின் ஒத்திகை வாகனம் கிரீன்வேஸ் சாலை முகாம் இல்லத்தில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்தடைந்தது.

இதனையடுத்து, நாட்டுப்பண் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக் கொடி கம்பத்தின் உச்சியின் மீது செல்ல இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மரியாதை செலுத்தும் விதமாக அணிவகுத்துச் சென்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை, விமானப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, அதிவிரைவுப்படை துறையினர் அணிவகுத்துச் சென்றனர்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும், கலாசாரப் பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவிகளின் நடனமும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தமிழ்நாடு பாரம்பரிய நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, இந்தியப் பாரம்பரியத்தின் சில நிகழ்ச்சிகளும் வட இந்திய நடனமும், காஷ்மீரியன் நடன நிகழ்ச்சிகளும் இந்த அணி வகுப்பு ஒத்திகையில் இடம்பெற்றன.

இதையும் படிங்க: பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

Intro:Body:*71வது குடியரசு தின விழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று மெரினா கடற்கரை நடைபெற்றது - முப்படை வீரர்களின் அணிவகுப்பு, விமானப்படை ஹெலிகாப்டர் அணிவகுப்பு,பள்ளி மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சிகளின் ஒத்திகைகள் நடைபெற்றது*

குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமையும், இரண்டாம் கட்ட ஒத்திகை நேற்று காலையும், இறுதி கட்ட ஒத்திகை இன்று காலையும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர்நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாகவும்,டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பை நோக்கியும்,
டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கிவரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கியும் திருப்பி விடப்பட்டது. அதேபோல, பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கியும்,வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாகவும், மாநகரப் பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்பட்டது. வழிதடங்களை போல, பேருந்து நிறுதங்களும் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது,அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்பட்டுள்ளது.பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை முன்பாக திருப்பி விடப்பட்டது.

*இன்று நடைபெற்ற இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சியில்,*

முதலில் தமிழக போலீசார் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வர, அணிவகுப்புக்கு நடுவே தமிழக முதலமைச்சரின் ஒத்திகை வாகனம் கீரீன்வேஸ் சாலை முகாம் இல்லத்தில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்தடைந்தது. தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியை வரவேற்க முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தயரானார். ஆளுநர் அவர்களின் ஒத்திகை வாகனமும் வந்தடைந்தது. தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுநரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் மலர்கொத்து கொடுத்து வரவேற்க, நாட்டுப்பண் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசிய கொடி கம்பத்தின் உச்சியின் மீது செல்ல இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மரியாதை செலுத்தும் விதமாக அணிவகுத்து சென்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறை,தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை,தேசிய மாணவர் படை,அதிவிரைவுபடை, CISF,RPF,FIRE SERVICE DEPARTMENT, THG, TAMILNADU FOREST SERVICE துறையினர் அணிவகுத்து சென்றனர். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும் கலாச்சார பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவிகள் நடனமும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழக பாரம்பரியம் மட்டுமின்றி இந்திய பாரம்பரியத்தின் சில நிகழ்ச்சிகள் வட இந்திய நடனமும், காஷ்மீரியன் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று என்பதால் முதலமைச்சர் கீரீன்வேஸ் சாலையில் இருந்து காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டு இருக்கும் மேடை வரை பாதுகாப்பும் பலபடுத்தப்பட்டு பாதுகாப்பு ஒத்திகையும் பார்க்கப்பட்டது, அதேபோல குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழக ஆளுநர் ராஜ் பவனில் இருந்து காந்தி சிலை வரும் வழியிலும் பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.