ETV Bharat / state

தமிழ்நாடு அரசு இல்லத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது

author img

By

Published : Nov 29, 2022, 9:22 AM IST

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அரசு இல்லத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது
தமிழ்நாடு அரசு இல்லத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் விசாகப்பட்டினம் சின்னவால்டேர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ கோவி ரெட்டி ஸ்ரீனிவாச ராவ் என்பவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி ஆன்லைன் வழியாக அறையை முன்பதிவு செய்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் மற்ற அரசு அதிகாரிகளை அவர் சந்தித்துள்ளார். தான் சிபிஐயில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் தங்களுடைய மகன்களுக்கு சிபிஐயில் வேலை வாங்கி தருவதாக ஸ்ரீனிவாச ராவ் கூறியுள்ளார். அதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மற்ற அரசு அதிகாரிகள் டெல்லி சிபிஐ போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்படி ஸ்ரீ கோவி ரெட்டி ஸ்ரீனிவாச ராவ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக போலி ஆவணங்களை காட்டி ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு இல்லத்தில் அறையை முன்பதிவு செய்து தங்கி இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ஹைதராபாத்தில் பல்வேறு நபர்களை சந்தித்து தான் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி தங்க நகைகள், வைரம் உள்ளிட்டவற்றை மோசடி செய்து பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீ கோவி ரெட்டி ஸ்ரீனிவாச ராவ் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.