ETV Bharat / state

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. இலவச மின்சாரம் ரத்தா? - அமைச்சர் விளக்கம்

author img

By

Published : Dec 31, 2022, 12:39 PM IST

Updated : Dec 31, 2022, 1:09 PM IST

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா.? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா.? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பின் மீண்டும் நீட்டிக்கப்படாது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அதோடு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளன. இதற்காக கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மையங்களும் நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை செயல்படும்.

இதுவரை 1.60 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படாது என்று பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி; தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Last Updated :Dec 31, 2022, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.