ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

author img

By

Published : Nov 13, 2021, 10:56 AM IST

11AM
11AM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளின் முன்னுரிமை அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

2. மழையின் போது மட்டுமல்ல, மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

மழை வெள்ள பாதிப்பின் போது மட்டும் மக்களுக்கு உதவாமல் தொடர்ந்து மக்களுக்கான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

3. பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு - மதுரையில் பரபரப்பு

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் என்பவரை, காவல் துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

4. இன்ஸ்டா நியூ அப்டேட்

யூட்யூப் போலவே இன்ஸ்டாகிராமிலும் வீடியோ பதிவேற்றுபவர்கள் பணம் சம்பாதிக்கும் முறையை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

5. பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு!

வாலிபரை தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

6. தார் டூ டொயோட்டா பிராடோ - விதவிதமான கார்களில் செல்லும் முதலமைச்சர்

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த போது முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்திய மஹிந்திரா தார் வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

7. கனமழை எச்சரிக்கை...பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம்...

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

8. ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

மதுரையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9. சென்னை பெருவெள்ளம்: மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

மழை வெள்ளத்தில் சிக்கிய இடங்களை கண்காணித்து அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்காக தண்ணீரில் மிதக்கும் அதி நவீன டிரோன் கேமராவை காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

10. HBD சுசீலா அம்மா

பிரபல பின்னணி பாடகியான பி. சுசீலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.