ETV Bharat / state

வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க..

author img

By

Published : Sep 30, 2022, 12:11 PM IST

புதிதாக வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இந்த வாரத்தில் முடிவடையக்கூடிய மத்திய , மாநில அரசுகளின் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த தொகுப்பு...

வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க..
வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க..

UPSC Engineering Services: பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி 327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: UPSC Engineering Services: பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

பணியாளர் தேர்வு ஆணையம் பட்ட படிப்பு முடித்தவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கும் வகையிலான 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: பணியாளர் தேர்வு ஆணையம்: டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,535 காலிப்பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் டிரேட் அப்ரண்டிஸ் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,535 காலிப்பணியிடங்கள்

இந்திய உணவுக் கழகத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 5ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: இந்திய உணவுக் கழகத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை...

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (MRVC) நிறுவனம் Project Engineer (Civil) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை...

மத்திய அரசு நிறுவனத்தில் +2 படித்தவர்களுக்கு வேலை...

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது Industrial Training பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: மத்திய அரசு நிறுவனத்தில் +2 படித்தவர்களுக்கு வேலை...

UGC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) Financial Advisor மற்றும் Secretary காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: UGC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்

இதையும் படிங்க: நியாயவிலைக் கடைகளில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.