ETV Bharat / state

UGC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Sep 30, 2022, 11:28 AM IST

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) Financial Advisor மற்றும் Secretary காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

UGC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்
UGC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்

ஊதிய விவரம்:

Financial Advisor பணிக்கு Level 14 Rs.1,44,200 – 2,18,200 என்ற ஊதிய அளவின் படி சம்பளம் வழங்கப்படும்.

Secretary பணிக்கு Level 15 Rs.1,82,200 – 2,24,100 என்ற ஊதிய அளவின் படி சம்பளம் வழங்கப்படும்.

Financial Advisor & Secretary தகுதிகள்:

Financial Advisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அகில இந்திய சேவைகள் / மத்திய அரசு அலுவலகங்களில் Group A கீழ் வரும் பதவிகளில் அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 17 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Teaching மற்றும் Researching போன்ற பணி சார்ந்த துறைகளில் Professor / Scholar பதவிகளில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

மேலும் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Joint Secretary பதவியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபர்களும் Secretary பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு Interview மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://recruitment.ugc.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2022 தேதி இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.