ETV Bharat / state

Meenakumari- DVAC Raid: மீனா குமாரி சிக்கியது எப்படி? முதல் தகவல் அறிக்கையில் பகீர்!

author img

By

Published : Nov 22, 2021, 4:43 PM IST

Updated : Nov 22, 2021, 4:50 PM IST

சென்னை மாவட்ட பதிவாளர் மீனா குமாரி (Meenakumari) அலுவலகத்தில் லட்சக் கணக்கான பணம் கட்டு கட்டாக கைப்பற்ற சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் முதல் தகவல் அறிக்கை மூலம் வெளியாகியுள்ளன.

Meenakumari- DVAC Raid
Meenakumari- DVAC Raid

சென்னை : சென்னை (தெற்கு) மாவட்ட பதிவாளராக இருந்து வருபவர் மீனா குமாரி. இவரது அலுவலகம் நந்தனம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு மாவட்ட பதிவாளர் மீனா குமாரி (Meenakumari) தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெற்று பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் பதிவாளர் மீனா குமாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கட்டுக்கட்டாக பணம்

மேலும், அவரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் கடந்த 19 ஆம் தேதி மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு லட்சக் கணக்கான பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

குறிப்பாக தெற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பதிவாளர் மீனா குமாரியின் அறை, அவரது அரசு வாகனம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களும், முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் லட்சக் கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

முதல் தகவல் அறிக்கை

இந்நிலையில இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையின் போது பதிவாளர் மீனா குமாரி மட்டுமல்லாமல் அலுவலகத்தின் உதவியாளர் தினகரன், பதிவாளரின் வாகன ஓட்டுநர் சந்தோஷ் குமார் மற்றும் இரவு காவலர் நசீர்கான் அகியோரும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனையின் போது பதிவாளர் மீனா குமாரியின் அறையில் நீல நிறப் பையில் சுமார் 3 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணம், அவரது அரசு வாகனத்தில் வெவ்வேறு கவர்களில் 25 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் உள்பட மொத்தம் 3 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது.

சிக்கிய மீனா குமாரி

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக அலுவலக உதவியாளர் தினகரன், அரசு வாகன ஓட்டுநர் சந்தோஷ் குமார் மற்றும் இரவுக் காவலர் நசீர் கான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் பதிவாளர் மீனா குமாரி அலுவலக உதவியாளர் ரமேஷ் என்பவரின் மூலம் பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீல நிற பை

குறிப்பாக நீலநிற பையில் இருந்த பணத்தை வைத்துக்கொள்ளுமாறும், தான் வீட்டிற்குச் செல்லும்போது தன்னிடம் அந்தப் பணத்தை கொடுக்குமாறும் பதிவாளர் மீனா குமாரி தன்னிடம் கூறியதாக அலுவலக உதவியாளர் தினகரன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதிவாளர் மீனா குமாரி அலுவலகம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி நேரடி விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated :Nov 22, 2021, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.