மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ... பல்வேறு மொழிகளில் வெளியீடு!

மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ... பல்வேறு மொழிகளில் வெளியீடு!
DMK Release CM Stalin speech in 4 Language: அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் குறித்து பேசிய வீடியோவை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த பட்ஜெட் தொடரில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தைச் செயல்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று (செப் 15) காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்குத் திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
-
പല ദരിദ്രകുടുംബങ്ങളുടെയും ഗ്രാമീണ സമ്പദ്വ്യവസ്ഥയുടെയും നട്ടെല്ല് ഇന്നും സ്ത്രീകളാണ്.@AsianetNewsML @manoramanews @manoramaonline @mathrubhuminews #TNEmpowersWomen pic.twitter.com/BMEtEdE4cy
— DMK (@arivalayam) September 16, 2023
அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "பெண்கள் வீட்டில் உழைக்கும் உழைப்பை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதனை அங்கீகரிக்கும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது தான் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணை வடிவாய் இருப்பவர். என் மனைவி துர்கா என்னில் பாதி, எனக்கு உறுதுணையாக இருந்து எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பது என் மனைவி துர்காதான்.
-
అటువంటి నాయకుని పేరు మీద ఈ నెలవారీ మంజూరు పథకానికి పేరు పెట్టడం కలైంజ్ఞర్కు ఇచ్చే ఘనమైన నివాళి వారి శత జయంతి సంవత్సరంలో దీన్ని ప్రారంభించడం మరింత సముచితం@TV9Telugu @NtvTeluguLive @abntelugutv
— DMK (@arivalayam) September 16, 2023
#TNEmpowersWomen pic.twitter.com/00wqMzYsDK
என் மகள் செந்தாமரை அன்பு வடிவமாய் இருப்பவர். இவர்களைப் போன்றவர்கள் தான் மகளிர் அனைவரும். இதற்கு மகுடம் சூட்டும் திட்டம்தான் இந்த கலைஞர் மகளிர் உரிமத் தொகை திட்டம். குடும்பத்தை சுமக்கும் முதுகெலும்பாக அந்த குடும்பத்தின் பெண்கள் தான் உள்ளனர். எனவே அந்த மகளிர்க்கான உரிமை வேண்டும்" என்று பேசினார்.
-
यह हमारा द्रविड़ मॉडल है जिसने इस लिंग समानता को लाया और दोनों लिंगों को समान बनाया।@aajtak @indiatvnews @IndiaTVHindi #TNEmpowersWomen pic.twitter.com/l1sy1ji7Sw
— DMK (@arivalayam) September 16, 2023
இந்நிலையில், நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பல்வேறு மொழிகளில் வீடியோவாக வெளியிடப்பட்டு உள்ளன. மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய தமிழ் உறையை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சப்டைட்டில்சுடன் வெளியிடப்பட்டு உள்ளது. திமுகவின் X சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து உள்ளனர்.
