ETV Bharat / state

மத்திய, மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்!

author img

By

Published : Nov 12, 2020, 5:30 PM IST

 மத்திய-மாநில அரசின் உறவை மேம்படுத்த ஆலேசானை கூட்டம்!
மத்திய-மாநில அரசின் உறவை மேம்படுத்த ஆலேசானை கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதியரசர் மதன் மோகன் புஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் நிலைக் குழுவின் பரிந்துரைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று (நவம்பர் 12) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.