ETV Bharat / state

தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?

author img

By

Published : May 3, 2020, 12:15 AM IST

Updated : May 4, 2020, 8:44 PM IST

தமிழ்நாட்டின் வூகானான கோயம்பேடு
தமிழ்நாட்டின் வூகானான கோயம்பேடு

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கரோனா வைரஸ் பரவிய நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய மையப்புள்ளியாக (ஹாஸ்பாட்டாக) மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 757 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 257 நபர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். அண்மைக் காலமாக சென்னையில் நோய் தொற்று பாதிப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கோயம்பேடு காய்கறி சந்தை.

முதலில் இரண்டு லாரி ஒட்டுநர்கள், கொத்தமல்லி வியாபாரி ஆகியோருக்கு கரோனா வைரஸ் பரவிய நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அங்கு சென்று வந்தவர்கள் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டதில் பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்பில் இருந்த 90 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக பல மாநிலங்களிலிருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் வருகின்றன. குறிப்பாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் அதிகமாக வருகின்றன. அதேபோல், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி, பழங்கள், பூக்கள் வருகின்றன. பல்வேறு மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநர்கள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றனர்.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்

அவர்களுக்கும் எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் காய்கறி வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருந்தது. பெருமளவிலான பொதுமக்கள், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் சந்தைக்கு வந்து சென்றுள்ளனர். அவர்களை கண்காணித்து, முறைப்படுத்தவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாபாரிகளிடமிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்ற பொதுமக்கள், சிறு வியாபாரிகள் என தமிழகம் முழுவதும் இந்த தொற்று பரவியுள்ளது. கரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்த ஹூவானன் Huanan கடல் உணவு சந்தையில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. அந்த சந்தையில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்புதான் உலகம் முழுக்க பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அசைவ உணவு சந்தையான இங்கு பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் அசுத்தமான முறையில், பாதுகாப்பற்ற வகையில் வெட்டப்பட்டதாலும், இங்கு வந்து சென்றவர்களாலும் வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்பட்டது.

சீனாவில் உள்ள காய்கறி சந்தை
சீனாவில் உள்ள காய்கறி சந்தை

தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்து மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்கள், மீன் சந்தைகள், கறிக்கடைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தை கவனிக்கப்படாமலே இருந்தது. இதன்மூலம் சத்தமில்லாமல் கரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது கோயம்பேடு சந்தை. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்பில் இருந்த 90 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கும் சந்தை வளாகத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து சென்ற சில்லறை விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் முயற்சியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 90 பேரில் 50 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், அரியலூரைச் சேர்ந்த 18 பேர், விழுப்புரத்தை சேர்ந்த இருவர், பெரம்பலூரை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ள நிலையில், கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த மேலும் ஒன்பது பேருக்கு வைரஸ் சோதனையில் தொற்று உறுதி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தைக்கு சென்று வந்தவர்களில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விவரம்

வ.எண்மாவட்டம்எண்ணிக்கை
1சென்னை 50
2அரியலூர்20
3விழுப்புரம்2
4கள்ளக்குறிச்சி1
5பெரம்பலூர்1
6கடலூர் 11
7திருப்பூர்2
Last Updated :May 4, 2020, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.