ETV Bharat / state

ரூ.13 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் அழிப்பு

author img

By

Published : Jun 29, 2023, 2:12 PM IST

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.

சென்னை: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரக் கூடிய பயணிகளில் சில பயணிகள் கடத்தி வரும் போதைப் பொருட்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, போதைப் பொருட்களை கடத்தி வந்த கடத்தல்காரர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்.

நீதிமன்ற வழக்கு முடியும் வரையில், கடத்தல்கர்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில், சுங்கத் துறையினர் பாதுகாப்பாக வைப்பார்கள். பின்னர், வழக்குகள் முடிவடைந்ததும் போதைப் பொருட்களை, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயனம் மற்றும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிலையத்திற்கு (Chemical and medical waste incineration plant) கொண்டு சென்று, அங்கு பாய்லர் நெருப்பில் போட்டு எரித்து அழிப்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கு உரிய சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த 13 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ ஹெராயின், 5 கிலோ மெத்தகுலோன் ஆகிய போதைப் பொருட்களை நீதிமன்றம் அனுமதி உடன் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் எரியூட்டு நிலையத்தில் பாய்லர் நெருப்பில் போட்டு எரித்து அழித்தனர்.

இந்த 13 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களும், கடந்த ஓராண்டில் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்தவை என்று சுங்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்தபட இருப்பதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சுங்கத்துறை மற்றும் விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இருந்த பார்சல்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இதனையடுத்து, இந்த சேதனையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்த பார்சல்களில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அந்த பார்சலில் இருந்தது சூடோபெட்ரின் (Pseudoephedrine) வகையைச் சேர்ந்த 49.2 கிலோ போதை பவுடர் என தெரிய வந்தது. மேலும், இதன் சர்வதேச மதிப்பு 9.86 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.