ETV Bharat / state

கரோனா பரவல்: குறையத் தொடங்கிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை!

author img

By

Published : May 31, 2021, 10:02 PM IST

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 800 ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா பரவல்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைவு!
கரோனா பரவல்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைவு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையிலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 600 பேர் என்ற அளவிலே தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிறது. கடந்த வாரம் 48 ஆயிரம் பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வால் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மாநகராட்சி அலுவலர்கள் கண்டறிந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்துவந்தனர்.

அந்த வகையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை சென்னையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஆயிரத்து 800 இடங்களாக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒரு தெருவில் 10 நபர்களுக்கு மேல் கரோனா தொற்றுள்ள உள்ள 499 இடங்களும், 6 நபர்களுக்கு மேல் தொற்றுள்ள ஆயிரத்து331 இடங்களும் இதில் அடக்கம். அதுமட்டுமின்றி, மூன்று நபர்களுக்கும் குறைவாக தொற்றுள்ள 5ஆயிரத்து 37 இடங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெதுவாக குறையும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் நிலைமை சீராக சுகாதாரத்துறைச் செயலாளர் கூறும் வழி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.