ETV Bharat / state

ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மீது வழக்குப்பதிவு..

author img

By

Published : Apr 5, 2022, 8:56 AM IST

ட்விட்டரில் அவதூறு பரப்பிய தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்Cyber crime registered case against Tamil nadu BJP IT chief Nirmal kumar spread slander on Twitter
ட்விட்டரில் அவதூறு பரப்பிய தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் Cyber crime registered case against Tamil nadu BJP IT chief Nirmal kumar spread slander on Twitter

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலி டிஜிட்டல் கார்டை பரப்பியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான டிஜிட்டல் கார்டு ஒன்றை பாஜக உறுப்பினரான கருணாகரன் என்பவர் டிவிட்டரில் பரப்பி உள்ளார். அதே பதிவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவரான சி.டி நிர்மல் குமார் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இதனிடையே, இந்த பதிவு அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருப்பதாகவும், உடனடியாக பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையிடம் பாஸ்கர் என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர்  சி டி நிர்மல் குமார் அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பதிவு
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி டி நிர்மல் குமார் அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பதிவு

அதில், பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் பாஜக உறுப்பினர் கருணாகரன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அமைதியைக் குலைக்கும் வகையில் அச்சுறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருகிற 8ஆம் தேதி பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் கருணாகரன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பாஜக தலைவர் நட்டா உடன் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்
பாஜக தலைவர் நட்டா உடன் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்

இதையும் படிங்க: ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம் - பாஜக தலைவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.