ETV Bharat / state

கோவிட் 19 தடுப்பூசி முகாமில் செலுத்தப்பட்ட 7.75 லட்சம் தடுப்பூசிகள்...

author img

By

Published : Sep 26, 2022, 7:37 AM IST

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசிகள்...
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசிகள்...

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 38வது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த 38வது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் மற்றும் பூஸ்டர் டோஸ் 5,95,660 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% முதல் தவணையாகவும் 91.61% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 37 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 12-14 வயது உடைய 19,91,349 (93.89%) பயனாளிகளுக்கு முதல் தவணை 15,92,420 (75.08%) பயனாளிகளுக்கு மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 15-17 வயது உடைய 30,54,613 (91.29%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 26,02,003 (77.76%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக மொத்தம் 92,27,702 (21.42%) பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு’ - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.