ETV Bharat / state

கோயில் அறங்காவலர் நியமனத்தில் முக்கிய முடிவு... இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 10:04 AM IST

கோவில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு Hr&CE கமிஷனர் மற்றும் OSD ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோவில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு Hr&CE கமிஷனர் மற்றும் OSD ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பதற்கு நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், சிறப்புப் பணி அதிகாரியும் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழக கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்வது குறித்து நீதிமன்றத்துக்கு உதவியாக வரும் 31ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், சிறப்புப் பணி அதிகாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான அமைப்பாக அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரின் அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 38 மாவட்டங்களிலும், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வழக்கறிஞர் அறையில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்" - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

மேலும், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் உறுதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 2021ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் 12 வாரங்களுக்குள் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட்ட நிலையில், 2024 மே வரை அவகாசம் கோரப்படுவதை குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர். அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் எனவும், இதற்காக இ-சேவை மையத்தின் சேவையை பயன்படுத்துமாரும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

பின்னர், அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றத்துக்கு உதவியாக வரும் 31ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், சிறப்பு அலுவல் அதிகாரிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "15 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு இருப்பிடத்திலேயே பட்டா வழங்க வேண்டும்" - ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.